"மாணவர்களுக்கான ஹெல்ப்-லைன்" : 4,214 அழைப்புகள் வந்ததாக அமைச்சர் விளக்கம்

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மாணவர்களுக்கான உதவி மைய எண் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், நேற்று இரவு 10 மணி வரையிலும் 4,214 மாணவர்கள் உதவி மையத்தை தொடர்புக்கொண்டு தங்களுக்கு தேவையான கருத்துக்களை கேட்டறிந்து உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கோவை : இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மாணவர்களுக்கான உதவி மைய எண் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்,  நேற்று இரவு 10 மணி வரையிலும் 4,214 மாணவர்கள் உதவி மையத்தை  தொடர்புக்கொண்டு தங்களுக்கு  தேவையான கருத்துக்களை கேட்டறிந்து உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பிட்ட காலத்திற்குள் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் 14417 என்ற புதிய உதவி மைய எண் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த உதவி மையத்திற்கு நேற்று இரவு 10 மணி வரை 4,214 அழைப்புகள் வந்துள்ளன. அதில் மாணவர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு  தேவையான கருத்துக்களை கேட்டனர். அதில் 1742 பேருக்கு விடையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எந்த கல்வி பாடத்தை தேர்ந்தெடுக்கலாம்  என்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையில் உதவி மைய எண் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்வதற்காக  ஸ்நேகா என்ற தனியார் நிறுவனம் மூலமாக மாணவர்களின் வீட்டிலேயே சென்று மாணவர்களுக்கு கவுன்ஸ்லிங் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பள்ளிக்கு தவறாமல் வரும் மாணவர்கள் சமூக சேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் சார்பில் ஊக்கம் மற்றும்  ஆக்கத்தையும் தருவது தொடர்பாக  பரிசீலிக்கப்பட்டு வருகிறது." என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...